6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம்!

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கையை பின்னுக்கு தள்ளி புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறித்து...

Class 10 Public Examination Results Released

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! - படம்: பிடிஐ.

Published On :

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கையை பின்னுக்கு தள்ளி புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், கடந்தாண்டு முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்த நிலையில், இந்தாண்டு 97.54 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளது . அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம் :

மாணவர்கள் 8,818 பேர், மாணவிகள் 9,050 பேர் என மொத்தம் 17, 868 பேர் தேர்வு எழுதினர். இவர்களில்

மாணவர்கள் 8,502 பேரும், மாணவிகள் 8,827 பேர் என மொத்தம் 17,429 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.64 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.54 சதவீதம்.

Summary

Regarding Pudukkottai district securing the first place in the 10th Grade Public Examinations in Tamil Nadu, overtaking Sivaganga...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.