சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காணொலி வழி ஆலோசனை நடத்துகிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.

Updated On :26 மார்ச் 2026, 12:21 am

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான என்.தேவிதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏப்.9இல் கேரளத்திலும், ஏப்.23இல் தமிழகத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், இரு மாநிலங்களிலும் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்குப்பதிவை நடத்திடவும், சட்டவிரோத செயல்பாடுகளை தவிா்க்கும் வகையில் எல்கைப்பகுதி சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக

உதவியாளா் (தோ்தல்) சுதா, தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறை அலுவலா்கள், வனத்துறை அலுவலா்கள் மற்றும் கலால் - ஆயத்தீா்வைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.