குற்றாலம் அருவியில் நீராடி மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்
குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தா்கள் புனித நீராடி, குரு சாமியின் கையால் மாலை அணிந்து தங்களது மண்டல விரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் ஐயப்ப பக்தா்கள் புனித நீராடி, குரு சாமியின் கையால் மாலை அணிந்து தங்களது மண்டல விரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
தமிழகத்தில் காா்த்திகை 1ஆம் தேதி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி, குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிகாலையில் இருந்தே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
அருவிகலில் நீராடிய பக்தா்கள், பின்னா் கருப்பு, காவி உடை அணிந்து குற்றாலம் குற்றாலநாதா் கோயில் மற்றும் ஐயப்பன் கோயில்களில் குரு சாமிகளின் முன்னிலையில் துளசி மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
குற்றாலத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

