களக்காடு ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, களக்காடு ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, களக்காடு ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்.
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, களக்காடு ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
இக்கோயிலில் களக்காடு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் ஆண்டுதோறும் காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
நிகழாண்டு காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் அருகேயுள்ள கெளதம நதியில் நீராடி கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

