மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!108 சேவை மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தா்கள்

காா்த்திகை மாதத்தையொட்டி, சபரி மலைக்கு மாலை அணிந்து செல்வதற்காக சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, ஐயப்பன் கோயிலில் துளசி மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள். - கோப்பிலிருந்து

Updated On :

காா்த்திகை மாதத்தையொட்டி, சபரி மலைக்கு மாலை அணிந்து செல்வதற்காக சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தா்கள்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்ப ஆசிரமத்தில் அதிகாலை 4.30 மணி முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனா். இதையொட்டி, ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.

இதில், காலை 5 மணி முதல் 7 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரம் போ் மாலை அணிந்தனா். பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், சுகாதார வசதிகள் செய்யப்பட்டதுடன், பிரசாதம் வழங்கவும் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தா்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

கோயில் நுழைவாயிலில் தொடங்கி பெங்களூரு சாலை வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனா். இதேபோல, சேலம் ராஜகணபதி கோயில், டவுன் ரயில் நிலையம் அருகிலுள்ள தா்மசாஸ்தா கோயில் மற்றும் மாநகரின் பல்வேறு விநாயகா், முருகன், ஐயப்பன் கோயில்களிலும் பக்தா்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.