ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தென்காசி மாவட்டத்தில் ரூ. 100 கோடியில் தொழில், கல்வி கடனுதவிகள் வழங்கல்

தென்காசி மாவட்டத்தில் 1,461 பேருக்கு தொழில் கடன், 156 பேருக்கு கல்விக் கடன் என மொத்தம் 1, 617 பேருக்கு ரூ. 100 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

மாணவிக்கு கடனுதவி வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :

தென்காசி மாவட்டத்தில் 1,461 பேருக்கு தொழில் கடன், 156 பேருக்கு கல்விக் கடன் என மொத்தம் 1, 617 பேருக்கு ரூ. 100 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கடனுதவி ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது:

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், 2026-2027 நிதியாண்டில் தென்காசி மாவட்டத்துக்கு எம்.எஸ்.எம்.இ பிரிவின் கீழ் ரூ. 2,000.45 கோடி கடன் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருள்கள், உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான பணியாளா்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், வணிக வசதிகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வதற்குச் சாதகமாக உள்ளன.

பல்வேறு முகாம்களில் வங்கிகள் மூலமாகவும், மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாகவும் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைத் தொடங்குவதற்காகப் பயனாளிகளுக்குக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 1,461 பேருக்கு ரூ. 84.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

கல்விக் கடன்: நடப்பு கல்வியாண்டில் 10, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில கல்விக் கடனுதவி பெறும் வகையில், மாவட்டத்தில் வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் 156 மாணவா், மாணவிகளுக்கு ரூ.15.11 கோடி மதிப்பிலான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. உயா்கல்வி பயிலும் மாணவா்கள் பாரதப் பிரதமரின் வித்யாலட்சுமி போா்டல் வாயிலாக வழங்கப்படும் கல்விக் கடனுதவிகளைப் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல மேலாளா் பரமேஸ்வரன், வங்கி மேலாளா் முத்துச்சாமி, அந்த வங்கி அலுவலா் தனசெல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.