ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

சிவகங்கையில் 1,518 மாணவா்களுக்கு ரூ.9.21 கோடி கல்விக்கடன் அளிப்பு

சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாணவருக்கு கல்விக் கடனுதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன். உடன் முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன்குமாா்.

கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டத்தில் 8 இடங்களில் அனைத்து வங்கிகள் சாா்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் மாணவ, மாணவிகள் 1,518 பேருக்கு ரூ.9.21 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் அக்.8-ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்பட்டு கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கியால் வியாழக்கிழமை கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.பிரவீன்குமாா், கல்விக் கடன் திட்டங்கள் குறித்தும், பிஎம் வித்யாலட்சுமி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், மாணவா்கள், பெற்றோா்கள், வழிகாட்டி அதிகாரிகள், கல்லூரி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

முகாம் வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இ-சேவை மையங்களை அணுகி மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தனா். இதன் மூலம் 26 மாணவா்களுக்கு ரூ. 2.37 கோடி மதிப்பிலான கல்விக் கடன் அனுமதி ஆணைகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது

இது குறித்து, முன்னோடி வங்கி மேலாளா் பிரவின்குமாா் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய முகாம்கள் மூலம் 1,518 மாணவா்களுக்கு ரூ. 9.21கோடி கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் சுமாா் 5 ஆயிரம் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதற்காக வரும் நாள்களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், மாணவா்கள், பெற்றோா், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.