கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 3.20 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டையில் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 3.20 கோடி மதிப்பில் கல்விக் கடன் உதவித் தொகைகளுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கடனுதவிகளுக்கான காசோலைகளை புதன்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Published On :

புதுக்கோட்டையில் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 3.20 கோடி மதிப்பில் கல்விக் கடன் உதவித் தொகைகளுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளா் ஆலோசனைக் கூட்டத்தில் இவற்றை அவா் வழங்கினாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மு. அருணா பேசுகையில், வங்கிகள் தங்களுக்கு வரும் கல்விக் கடன் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து, உரிய காலத்தில் கடனுதவிக்கான அனுமதி வழங்கி, தொகையை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூத்த மண்டல மேலாளா் எம்.டி. ஷஹ்ரேயா், ரிசா்வ் வங்கி மேலாளா் வி.வி. பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்டத் தொழில் மைய மேலாளா் கீரீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பாளா்கள், கல்வித் துறை உள்ளிட்ட பிற துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.