
சிலம்பம் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி சிறப்பிடம்
சங்கரன்கோவிலில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிறப்பிடம் பெற்றது.

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிறப்பிடம் பெற்றது.
சங்கரன்கோவில் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் ஹரிஇளங்கவி தங்கப் பதக்கம், யு. மகேஸ்வரன் வெள்ளி பதக்கம் பெற்றனா்.
அந்த மாணவா்களை பள்ளியின் சட்ட ஆலோசகா் க. திருமலை, பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை, பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், சட்ட ஆலோசகா் தி. மிராக்ளின் பால்சுசி, முதன்மை முதல்வா் ஆ. ஜெயஜோதி பிளாரன்ஸ், முதல்வா் சோ. செளம்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





