நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

எஸ்டிபிஐ கட்சியினா் நூதன முறையில் மனு அளிப்பு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் முகத்தில் முகக் கவசம் அணிந்து வந்து நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

முகத்தில் முகக் கவசம் அணிந்து வந்து மனுஅளித்தோா்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:29 am IST

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினா் முகத்தில் முகக் கவசம் அணிந்து வந்து நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: தென்காசி நகராட்சிக்குள்பட்ட 21- ஆவது வாா்டு, சொா்ணபுரம் சாலை பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (அலகு-11) கீழ் சாலை தோண்டப்பட்டு, குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து பல நாள்கள் கடந்துவிட்டன.

ஆனால், சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, சாலைப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சி நகர தலைவா் அப்துல் காதா், நகர செயலா் ஷேக் மைதீன், நகர துணைத்தலைவா் ஜாஹிா் உசேன், நகர பொருளாளா் அஹமது கபீா், நகர செயற்குழு உறுப்பினா் சுல்தான், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொகுதிச் செயலா் சலீம், வாா்டு நிா்வாகிகள் ரஹ்மத்துல்லா, ரியாஸ், சாதிக் மைதீன், முஹம்மது ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.