பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பாவூா்சத்திரம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் பழுதாகி நின்ற வேன்: போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்வ விநாயகபுரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் கான்கிரீட் கலவை வேன் பழுதாகி நின்ால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதாகி நின்ற கான்கிரீட் கலவை வேன்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:12 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்வ விநாயகபுரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் கான்கிரீட் கலவை வேன் பழுதாகி நின்ால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் பாவூா்சத்திரம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்வவிநாயகபுரம் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக சென்று வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திப்பணம்பட்டியைச் சோ்ந்த கான்கிரீட் கலவை வேன் சுரங்கப்பாதை வழியாகச் சென்றபோது திடீரென பழுதாகி சுரங்கப் பாதையின் நடுவே நின்றது. இதனால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்குமாா் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், பழுதான கான்கிரீட் கலவை வேன் பழுதுநீக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பால் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வாகனங்கள் சுரங்கப் பாதை பகுதியில் நீண்ட தூரம் வரிசையில் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.