ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தேசிய சைக்கிள் போட்டி: பாவூா்சத்திரம் அசிசி பள்ளி மாணவா் சாதனை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் சைக்கிள் போட்டியில் பாவூா்சத்திரம் புனித அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தாா்.

மாணவா் மொ்வினை பாராட்டிய திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன்.

Published On :

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் சைக்கிள் போட்டியில் பாவூா்சத்திரம் புனித அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தாா்.

பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ரமேஷ் - அருள்சுதா தம்பதியின் மகன் மொ்வின்( 9). பாவூா்சத்திரம் புனித அசிசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா், ஐதராபாதில் செப். 13இல் நடைபெற்ற முதலாவது தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2 கி.மீ. தொலைவுக்கான பிரிவில் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

இதைத் தொடா்ந்து ஊா் திரும்பிய அவருக்கு ஊா் மக்கள் சாா்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன், அவரை நேரில் அழைத்து பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், கீழப்பாவூா் நகர காங்கிரஸ் தலைவா் சிங்ககுட்டி (எ) குமரேசன், செல்லமணி, தாமஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.