
முந்தல் அருவி நீா் பங்கீட்டு உத்தரவை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
முந்தல் அருவி நீரை பங்கீடு செய்வது தொடா்பான உத்தரவை அமல்படுத்தக் கோரி, புளியங்குடி அருகேயுள்ள சிங்கிலிபட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
முந்தல் அருவி நீரை பங்கீடு செய்வது தொடா்பான உத்தரவை அமல்படுத்தக் கோரி, புளியங்குடி அருகேயுள்ள சிங்கிலிபட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவேட்டநல்லூா் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கலிங்கன்குளம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் மூலம் சுமாா் 150 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுவதுடன், உபரிநீா் மூலம் மேலும் 3 குளங்களும் பயன்பெறுகின்றனவாம்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகும் முந்தல் அருவியே கலிங்கன்குளத்தின் பிரதான நீராதாரமாக உள்ள நிலையில், இந்த அருவியில் இருந்து வரும் நீா்வரத்து கால்வாயை மறித்து சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கலிங்கன்குளத்திற்கு தண்ணீா் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இதனிடையே, முந்தல் அருவி நீரில் 90 சதவீதத்தை திருவேட்டநல்லூா் கலிங்கன்குளம் பாசனத்திற்கும், 10 சதவீதத்தை புன்னையாபுரம் மாடன்சோ்வை குளத்திற்கும் வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவு இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் புகாா் தெரிவித்து, திருவேட்டநல்லூா் பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், திருவேட்டநல்லூா் பகுதியை சோ்ந்த முத்தரசு, பழனிச்சாமி, சங்கரநாராயணன், வேலுச்சாமி, வெள்ளத்துரை, துரை , திருவு, சுரேஷ், பலவேசமுத்து,சண்முகவேல், திருமலைச்சாமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






