தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தர்னா
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.


ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலப் பொருளாளர் வில்சன் பர்னபாஸ் தர்னாவை தொடங்கி வைத்தார்.
அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் வெ. துளசிராமன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பிரசார செயலர்
த. தனசிங் ஐசக் மோசஸ், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டச் செயலர் சு. அருணாசலம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
தர்னாவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
ஆறாவது ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும், தமிழக அரசு ஆசிரியர்களுக்கு அதே தேதி முதல் வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தர்னாவில் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. தர்மராஜ் பிராங்ளின், மாவட்டப் பொருளாளர் ஆ.செ. ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...