பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம் நடுநிலைப் பள்ளியில் எம்.பி. நிதியில் ரூ. 10 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம் நடுநிலைப் பள்ளியில் எம்.பி. நிதியில் ரூ. 10 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் புதிய கட்டடம் கட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.எச். பால் மனோஜ் பாண்டியன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் பி.எச். பால் மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

மாநகராட்சி துணை மேயர் பூ. ஜெகநாதன், மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ்.கே.ஏ. ஹாதர்அலி,  மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹயாத், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெüலத், பள்ளி நிர்வாகி கே. நபிஷா பீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். ராமசுப்பிரமணியன் வரவேற்றார். வி. பெருமாள் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com