கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமத் ஜயந்தி மஹோத்ஸவம் ஆரம்பம்
கிருஷ்ணாபுரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமத் ஜயந்தி மஹோத்ஸவம் ஜன. 6 -ம் தேதி தொடங்குகிறது.


கிருஷ்ணாபுரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமத் ஜயந்தி மஹோத்ஸவம் ஜன. 6 -ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும்,7 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் குழுவினரின் அலங்கார பஜனை நடைபெறுகிறது.
ஜன. 6 முதல் ஜன.10-ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு புருஷஸýக்த ஜெபமும், அபிஷேக அலங்காரங்களும்,9 மணிக்கு லட்சார்ச்சனையும்,11.30 மணிக்கு தீபாராதனையும், மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஜன.9-ம் தேதி காலை 9 மணிக்கு கடஸ்தாபனம்,கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,மூலமந்திர ஹோமம்,ருத்ரம் சமகம்,புருஷஸþக்த ஹோமங்களும்,11.30 மணிக்கு பூர்ணாஹுதியும்,மாலை 4 மணிக்கு தேவி மாஹாத்மிய பாராயணமும் நடைபெறுகிறது.
ஜன. 10-ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம்,சண்டி ஹோமம்,வித்யா ஹோமமும், காலை 11 மணிக்கு பூர்ணா ஹுதி,கன்யா பூஜை,சுவாசினிபூஜை,வடுக பூஜை மற்றும் தம்பதி பூஜையும் நடைபெறுகிறது.
யாகங்களை ஸ்ரீயக்ஞரத்ன தீட்சிதர் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர். மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
அகண்ட ராமநாம ஜெபம்: ஜன.10-ம் தேதி காலை 6 மணி முதல் ஜன. 11-ம் தேதி காலை 6 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடைபெறுகிறது.
இதற்கு ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம நிறுவனர் தவத்திரு ஸ்வாமி அகிலாநந்தஜி தலைமை வகிக்கிறார்.விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு பொதுச்செயலர் நாகராஜன்,மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஸ்ரீஅனுமார் பக்தர்கள்,ஸ்ரீசத்யசாயி சேவா சமிதியினர்,வள்ளலார் மன்றத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அனுமத் ஜயந்தி: ஜன.11-ம் தேதி ஸ்ரீஅனுமத் ஜயந்தி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதியினரின் பஜனையும்,சிந்துஜா சந்திரமெüலியின் சங்கீத உபன்யாசமும் நடைபெறுகிறது.
மாலையில் இளம்பிறை மணிமாறனின் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன்,அறங்காவலர்கள் சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன்,சிவகுமார்,மீனா பட்டாச்சாரியார்,செயல் அலுவலர் (பொறுப்பு) தங்கப்பாண்டி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...