நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பண்பொழி திருமலைக்கோவிலில் தேரோட்டம்:ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த  நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய

News image
Updated On :26 ஜனவரி 2013, 1:15 pm

வி.குமாரமுருகன்

கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த  நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஜன.19-ம் தேதி காலையில் சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,இரவில் கலைமான் வாகன உலாவும்,20-ம் தேதி காலை வெள்ளிச்சப்பர வீதியுலாவும்,இரவில் கோரத வீதியுலாவும், 21-ம் தேதி காலை சிம்ம வாகன வீதியுலாவும்,இரவில் ஆட்டுகிடா வாகனத்தில் வீதியுலாவும், 22-ம் தேதி காலையில் சட்டத்தேரில் வீதியுலாவும்,இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலாவும், 23-ம் தேதி காலையில் வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,ஜன.24-ம் தேதி காலையில் கோரதத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

அன்று காலை ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகர் அழைப்பு உபசாரமும்,பிற்பகல் முருகன்-சண்முகர் எதிர்சேவையும் இரவில் இரட்டைச்சப்பரத்தில் வீதியுலாவும், 25-ம் தேதி காலையில் வெள்ளைச்சாத்தி வைபவமும்,மதியம் பச்சை சாத்தி வைபவமும்,இரவில் கைலாச பர்வதத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.