பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

களக்காடு அருகே டெம்போ ஓட்டுநர் அடித்துக் கொலை: தக்கலையை சேர்ந்தவர்

குமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே திங்கள்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.

Published On :

குமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே திங்கள்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.

தக்கலை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரதாஸ் (53). டெம்போ  ஓட்டுநர். இவர், திங்கள்கிழமை காலையில் தக்கலை வாகன நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் களக்காடு சென்று வாழைக்கன்றுகள் ஏற்றிவர வேண்டும் என்று கூறினராம். இதையடுத்து, மூன்று பேரும் தக்கலையில் இருந்து புறப்பட்டனர். நான்குனேரி வழியாக களக்காடு பிரதான சாலையில் வந்து, பின்னர் கடம்போடுவாழ்வு அருகே மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, உடன் வந்த இரண்டு பேரும் குமாரதாஸை கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனராம். பலத்த காயமடைந்த குமாரதாஸ், தனது செல்லிடப்பேசியில் மனைவியைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து, அவரது மனைவி போலீஸில் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தக்கலை மற்றும் களக்காடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு குமாரதாஸ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகே அவரது டெம்போவும் நின்று கொண்டிருந்தது.

குமாரதாஸை அடித்துக் கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொன்றார்கள் என்பதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.