அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி திருநெல்வேலியில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் 2015-16ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் மாநில அளவிலான வாலிபால் போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (மார்ச் 3) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், தருமபுரி, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், நீலகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 23 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே நாக் - அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டியை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தொடக்கிவைத்தார். வணிகவரித் துறை இணை ஆணையர் கே.எம். கார்த்திகேயினி, திருநெல்வேலி வாலிபால் கழக மாவட்டச் செயலர் என். ரவீந்திரன், பாளையங்கோட்டை விளையாட்டு விடுதி மேலாளர் பிராங்க்பால் ஜெயசீலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முதல்நாள் போட்டியாக ஆண்கள் பிரிவில், ஈரோடு - தருமபுரி அணிகள் மோதின. இதில், தருமபுரி அணி வென்றது.
திருவாரூர் - நாகப்பட்டினம் அணிகள் மோதியதில் நாகப்பட்டினம் அணி வென்றது. தூத்துக்குடி - திருநெல்வேலி அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி அணி வென்றது.
கன்னியாகுமரி - திண்டுக்கல் அணிகள் மோதியதில் திண்டுக்கல் அணி வென்றது. தொடர்ந்து சனிக்கிழமை வரை போட்டிகள் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK
ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமா? டிரம்ப் மீது எழும் குற்றச்சாட்டு!

ஏ. ஆர். ரஹ்மான் நடுவராகப் பங்கேற்கும் முதல் தமிழ் இசை நிகழ்ச்சி!

பேரவையில் வார்த்தை மோதல்! அமைச்சர் சரத் vs கே.என்.நேரு
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


