தெற்குவிஜயநாராயணபுரத்தில் டிச.30 இல் சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டி

தெற்கு விஜயநாராயணபுரத்தில் இம் மாதம் 30 ஆம் தேதி சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

தெற்கு விஜயநாராயணபுரத்தில் இம் மாதம் 30 ஆம் தேதி சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இச் சங்கத்தின் சார்பில் மாவட்ட இளையோர் சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் விஜயநாராயணபுரத்தில் உள்ள ரெக்ட் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்-மாணவிகளும் பங்கேற்கலாம்.   
ஒரு பள்ளிக்கு தலா ஒரு மாணவர்-மாணவிகள் அணிகள் 8 பேர் கலந்துகொள்ளலாம். 18 வயதிற்கு உள்பட்டவர்கள் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் கிடையாது. மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். முதல் மூன்று இடம் பெறும் அணிகளுக்கு வெற்றிக்கோப்பையும், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்கும் மாவட்ட அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இம் மாதம்  29 ஆம் தேதிக்குள் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும், வயது சான்றிதழுடன் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com