திருநெல்வேலி மாவட்ட பீடி தொழிலாளர் சங்க (சிஐடியூ) கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர்.மோகன், மாவட்டப் பொதுச்செயலர் எம்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஏ.ஆரியமுல்லை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் வி.சண்முகம், ஏ.மகாவிஷ்ணு, ஏ.குருசாமி, ஜி.சுடலைமணி, ஏ.சூசை அருள்சேவியர், வி.சுப்புலட்சுமி, பி.எஸ்.மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: கூட்டத்தில், பிடிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்து பீடி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் பீடி தொழிலாளர்களுக்கு வங்கிகளில் ஊதியம் வழங்குவதை விடுத்து நேரடியாக வழங்க வேண்டும்; தமிழக அரசு வெளியிட்டுள்ள கூலி உயர்வு ஆரசாணையை அமல்படுத்தாத பீடி நிறுவனங்களின் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; சில பீடி நிறுவனங்களில் பணியாற்றி விலகிய தொழிலாளர்களுக்கு தகுந்த பணிக்கொடையை வழங்க வேண்டும்; ரேஷன் கடைகளில் சீனி விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கைவிட வேண்டும்; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ள பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.