பேட்டையில் பாலம் பழுது: போக்குவரத்து மாற்றம்; மக்கள் அவதி
திருநெல்வேலியை அடுத்த பேட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையில் உள்ள பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.


திருநெல்வேலியை அடுத்த பேட்டை அரசு மருத்துவமனை அருகே சாலையில் உள்ள பாலம் பழுதானதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
பேட்டையில் உள்ள திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பேட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள சிறிய பாலத்தில் ஓட்டை விழுந்தது.இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் 48ஆவது வார்டின் கிளைத் தலைவர் சேவத்தா, செயலர் காஜா, பேட்டை நிஜாம் ஆகியோர் தலைமையில் புதன்கிழமை பாலத்தின் ஓட்டையில் மரம் நடும் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்த பேட்டை காவல் துறை ஆய்வாளர் செல்வி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்பிறகு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மற்ற ஊர்களில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் பேருந்துகள் மதிதா இந்துக் கல்லூரி, பழைய பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டன. திருநெல்வேலியில் இருந்து பேட்டை வழியாக பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பேட்டை காவல் நிலையம், வீரபாகு நகர் வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் கூடுதல் நேரம் ஆவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...