மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பாளையங்கோட்டையில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,  அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.  பொருளாளர் கே. பாபநாசம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு யாதவ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் தங்கவேல்சாமி, தொழிலதிபர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்விழாவை சிறப்பாக நடத்திய அமைப்பின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 பயிலும் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் இசக்கிமுத்து, செல்வராஜ், ராமகிருஷ்ணன், ஈனமுத்து, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயலர் டி. ராமசாமி வரவேற்றார். துணைத் தலைவர் வி. சுப்பையா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com