ஓய்வு பெற்ற வாணிபக் கழக பணியாளர் சங்கக் கூட்டம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் நலச் சங்க கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் நலச் சங்க கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு  நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கௌரவத் தலைவர் கே. சங்கரன் தலைமை வகித்தார். சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவத் தலைவராக கே. சங்கரன், மண்டலத் தலைவராக கே. சுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக எஸ். மீரான்மைதீன், ஆர். மாடசாமி, எஸ். மாடசாமி, மண்டலச் செயலராக எஸ்.பழனி, இணைச் செயலர்களாக பி. முத்துசாமி, பரமசிவன், இ. சரவணக்குமார், துணைச் செயலர்களாக பி. செல்லத்துரை, சிவகுரு, முஹம்மதுஹனீப், செயற்குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: கூட்டத்தில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகம், மண்டல அலுவலகம், தலைமை அலுவலகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பணப் பலன்களை பெறுவதற்கு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பது, பட்டியல் எழுத்தர்களுக்கு 5 சதவீதம் நிலுவைத் தொகை வழங்க அரசாணை இருந்தும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி ஆணையரை சந்தித்து கோரிக்கை விடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com