பாளை.யில் அஞ்சல் தலை கண்காட்சி

தேசிய அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.
Updated on
1 min read

தேசிய அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.
திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் சார்பில், தேசிய அஞ்சல் வார விழா அனைத்து தலைமை தபால் அலுவலகங்களிலும், கிராமப்புற அஞ்சலகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை அஞ்சல் தலை சேகரிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மேரி சர்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளர் ஜி. செந்தில்குமார் தொடங்கிவைத்தார். தபால் தலை சேகரிப்பாளர் இளமாறன் ஏற்பாட்டின்பேரில் இந்த அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
இதில், அரிய வகை அஞ்சல் தலைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அஞ்சல் தலைகள், நினைவுச் சின்னங்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆலயங்களுடன் கூடிய பல்வேறு வகையான அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை, பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பள்ளித் தலைமையாசிரியர் கனகவள்ளி, அஞ்சல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி கனகசபாபதி, கோட்ட வணிக அதிகாரி ராஜேந்திர போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com