பாளை.யில் தமிழ்ச் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 409ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெல்லை கம்பன் கழகத்தின் 409ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். கழக துணைத் தலைவர் ந.சு.சங்கரன் வரவேற்றார். கம்பனிடம் கற்கலாம் இணைந்து செயலாற்ற என்ற தலைப்பில் கோவில்பட்டி நல்லாசிரியர் கு.ராசாமணியும், தாடகை வதம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். பேராசிரியர் காந்திமதிநாதன், சு.பாண்டியன், தங்கராஜ், குகநமச்சிவாயம், வெள்ளத்துரை, கிருஷ்ணன், கணேசன், பிள்ளைசூரியன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com