மனநலம் பேணுதல் விழிப்புணர்வுப் பேரணி
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மனநலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மனநலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், உளவியல்துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணி தெற்கு பிரதான வீதியில் லூர்துநாதன் சிலை அருகில் இருந்து புறப்பட்டது.
பேரணியை மனநல மருத்துவர் கார்த்திக் துரைசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் மு. முஹம்மதுசாதிக் தலைமை வகித்தார். கல்லூரி அரசு உதவிபெறா பாடப்பிரிவு இயக்குநர் ஏ. அப்துல்காதர் முன்னிலை வகித்தார். பேரணி தெற்கு பிரதான வீதி, பிரதான சாலை வழியாக ஜவாஹர் திடலை வந்தடைந்தது.
பேரணியில் 100- க்கும் மேற்பட்ட நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள், திட்ட அலுவலர்கள் மு. சாகுல்ஹமீது, முகம்மதுயஹ்யா, ஜெஸ்லின் கனகஇன்பா, ஜெமிமெர்லின்ராணி, பிரேமலதா மற்றும் உளவியல்துறை பேராசிரியர்கள் ஆஷா, ரம்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...