அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல்லை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. கடையநல்லூர், மத்தளம்பாறை, இடைகால், வைரவன்குளம், கிளாங்காடு, தார்க்காடு உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீதம் அறுவடை முடிந்துவிட்டது.
அறுவடை தொடக்கத்தில் குவிண்டாலுக்கு ரூ.1200 வரை விற்பனையான நெல், தற்போது படிப்படியாக குறைந்து
ரூ. 925-க்கு விற்பனையாகி வருகிறது. அறுவடை செய்யப்பட்ட களத்திலேயே விற்பனை செய்வதைத்தான் தற்போது பெரும்பாலான விவசாயிகள் விரும்புகின்றனர். தேவையற்ற போக்குவரத்து செலவு, நெல் வீணாகும் செலவு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் விவசாயிகள் அறுவடை களத்திலேயே விற்பனை செய்து வருகின்றனர்.
முன்பெல்லாம், 70 கிலோ எடை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் நெல்லை வாங்கி வந்தனர். அறுவடை களத்திலேயே நெல் வாங்கப்படுவதால் ஈரப்பதத்தால் ஏற்படும் எடை பாதிப்பை சரிகட்ட 75 கிலோவாக குவிண்டாலை உயர்த்தி வியாபாரிகள் பெற்று வந்தனர். ஆனால், தற்போதோ அதையும் 80 முதல் 82 கிலோவாக உயர்த்தி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சிவகுமார் கூறியது: ஆரம்பத்தில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ. 1200 வரை இருந்தது. தற்போது ரூ.925-க்குதான் விவசாயிகள் வாங்குகின்றனர். அதுவும் குவிண்டாலை 80 கிலோ முதல் 82 கிலோ வரை உயர்த்தி விட்டனர்.
அதையும் தாண்டி உள்ளூர் வியாபாரிகள் பலர் ஒருங்கிணைந்து நெல் விலையை நிர்ணயம் செய்து விட்டதால் அந்த விலையை தாண்டி வாங்குவதற்கு வியாபாரிகள் தயாரில்லை. இதனால் அறுவடை செய்யப்பட்டு பல நாள்கள் பின்னரும் வியாபாரிகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த பலரும் அதை நினைத்து கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். நெல் விற்பனை செய்யப்பட்டு 10 நாள்கள் கழித்துதான் பணம் தரப்படும் என வியாபாரிகள் கூறும் நிபந்தனையை ஏற்க வேண்டிய நிலையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைத்தாலும் கூட அதற்கான போக்குவரத்து செலவு, சாக்கு மூட்டைகள் செலவு, ஆள் கூலி போன்றவற்றை ஒப்பிடும் போது அதுவும் விவசாயிகளுக்கு போதிய விலை தருவதில்லை. எனவே, அறுவடை களத்திலேயே அரசு நெல்லை கொள்முதல் செய்தால் விவசாயிகள் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

எதிர்க்கட்சியின் குரலை முடக்கமுயலும் தவெக அரசு! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் | DMK | TVK

போகப்போக விஜய் தெளிவு பெறுவார்! வைகோ சொன்ன பதில்! | MDMK | TVK

இது தெரியுமா? அதிகாலை, அந்திமாலையில் சூரியன் சிவப்பு நிறமாகத் தோற்றமளிப்பது ஏன்?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


