தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா தினம் குறித்த விழிப்புணர்வு செயல்முறை காட்சி ஏப்.13இல் கடையநல்லூர் பகுதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க கடையநல்லூர் பகுதிச் செயலர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
நிழல் இல்லாத தினம் என்பது சூரியன் வடக்கு நோக்கிய நகர்வு நாள்களில் ஒருநாளும், தெற்கு நோக்கிய நகர்வு நாள்களில் ஒரு நாளும் பூஜ்ய நிழல் தினம் வரும். அன்றைய தினம் சூரியன் நேர் உச்சிக்கு வரும்பொழுது பொருள்களின் நிழல் சாயாது. அப்போது பல்வேறு பொருள்களின் நிழலை உற்று நோக்குதல் சிறந்த கற்றல் அனுபவமாகவும் மகிழ்ச்சியான செயல்பாடாகவும் இருக்கும்.
சாதாரணமாக பொருள்களின் நிழல் சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக் கொண்டே வரும். ஆனால் நாம் படிப்பது போல் தினமும் நேர் உச்சிக்கு வருவதில்லை. மகர ரேகைக்கு 23.5 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.5 டிகிரி வடக்காகவும் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் வருடங்களில் இரண்டு நாள்கள் மட்டுமே சூரியன் சரியான நேர் உச்சிக்கு வரும். மற்ற நாள் களில் வராது. நிகழாண்டில் கன்னியாகுமரியில் ஏப்.10லும், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏப்.13லும் இந்நிகழ்வைக் காணலாம்.
இது தொடர்பான விழிப்புணர்வு செயல்முறை கண்காட்சி கடையநல்லூர் அரசு உறுப்புக் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏப்.13இல் நடைபெறுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளிக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP

மின் கட்டண உயர்வு இல்லை! இழப்பு இல்லாமல் எப்படி?செந்தில் பாலாஜி கேள்வி! | DMK | TVK
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


