பாளையங்கோட்டையில் சிஐடியூ சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நலவாரிய பணப்பயன்களுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். வேல்முருகன், பி. முத்துக்கிருஷ்ணன், எஸ். வண்ணமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் கே. சீதாபதி, எஸ்.கே. பழனிசாமி, ஏ. ஆரியமுல்லை, டி. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







