பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது 2 ஜி,  3 ஜி செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:57 am IST

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது 2 ஜி,  3 ஜி செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். தனது 2 ஜி மற்றும் 3 ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 20ஆம் தேதி வரை ரூ. 110-க்கு செய்யப்படும் டாப்அப்களுக்கு ரூ. 110 மதிப்புள்ள டாக்டைம் வழங்குகிறது. 
மேலும், செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எல். பேக்காக இம்மாதம் 30ஆம் தேதி வரை புது அன்லிமிடெட் டேட்டா பூஸ்டரை ரூ. 248-க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 51 நாள்களுக்கு தினமும் 3 ஜிபி 3 ஜி டேட்டாவை பெறலாம். இந்த பூஸ்டரை சி-டாப்அப்,  செல்ப் கேர் (எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப நபய ஈஅபஅ248 என்று டைப் செய்து 123-க்கு அனுப்ப வேண்டும்) மற்றும் வெப் போர்டல் மூலமாக ஆக்டிவேட் செய்யலாம்.
நெட்வொர்க் மாற்ற: பிற நெட்வொர்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல். க்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். 24 மணி நேரமும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டாவுடன் கூடிய பல்வேறு பிளான்கள் வழங்கப்படுகிறது.
சிறப்பு முகாம்: பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் சலுகைகளை பெறும் வகையில் தொலைபேசி நிலையங்களில் சிறப்பு மேளா நடைபெறுகிறது. அதன்படி,  இம்மாதம் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளா நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.