உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால போட்டிகள் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் தி. முனியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக புத்தக தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கு கோடை முகாம் சிறப்பு போட்டிகள் நடைபெறுகின்றன.
திங்கள்கிழமை (ஏப். 23) பிற்பகல் 2 மணிக்கு 1முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டியும், செவ்வாய்க்கிழமை (ஏப். 24) பிற்பகல் 2 மணிக்கு தலை குனிந்து வாசித்தால் தலை நிமிர்ந்து வாழலாம் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறுகின்றன.
புதன்கிழமை (ஏப். 25) மாலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி, 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தாமிரவருணி நதி நீர் வழித் தடங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு அறிவை பண்படுத்துவது புத்தகங்களா? இணையங்களா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புதன்கிழமை மாலை நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பரிசுகள் வழங்குகிறார்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை நேரிலோ, 0462 2561712 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு நூலகரை 97897ல10361 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உலக புத்ககத் தின விழாவையொட்டி, மூன்று நாள்களும் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
