நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி  மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஜாக்டோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:59 am IST

பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி  மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஜாக்டோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சேதுராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்தும்,  தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய  பிற பொறுப்பு நியமனங்களின்போது,  உரிய பணி மூப்பு தகுதியுடையோர் பட்டியலில் உள்ளவாறு பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மூட்டா அமைப்பின் பொதுச்செயலர் நாகராஜன்,  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பிச்சைக்கனி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொருளாளர் கணேசன்,  தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் மனோகரன்,  மாவட்டச் செயலர் ஆசீர் சார்லஸ்நீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.