பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது 2 ஜி, 3 ஜி செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு முழு டாக்டைம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். தனது 2 ஜி மற்றும் 3 ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 20ஆம் தேதி வரை ரூ. 110-க்கு செய்யப்படும் டாப்அப்களுக்கு ரூ. 110 மதிப்புள்ள டாக்டைம் வழங்குகிறது.
மேலும், செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எல். பேக்காக இம்மாதம் 30ஆம் தேதி வரை புது அன்லிமிடெட் டேட்டா பூஸ்டரை ரூ. 248-க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 51 நாள்களுக்கு தினமும் 3 ஜிபி 3 ஜி டேட்டாவை பெறலாம். இந்த பூஸ்டரை சி-டாப்அப், செல்ப் கேர் (எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப நபய ஈஅபஅ248 என்று டைப் செய்து 123-க்கு அனுப்ப வேண்டும்) மற்றும் வெப் போர்டல் மூலமாக ஆக்டிவேட் செய்யலாம்.
நெட்வொர்க் மாற்ற: பிற நெட்வொர்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல். க்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். 24 மணி நேரமும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டாவுடன் கூடிய பல்வேறு பிளான்கள் வழங்கப்படுகிறது.
சிறப்பு முகாம்: பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் சலுகைகளை பெறும் வகையில் தொலைபேசி நிலையங்களில் சிறப்பு மேளா நடைபெறுகிறது. அதன்படி, இம்மாதம் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளா நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


