ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

வைகோவுக்கு கருப்புக் கொடி: 2 பெண்கள் உள்பட 54 பேர் கைது

கோவில்பட்டியில், வைகோவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக பாஜக நிர்வாகிகள் 2 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:01 am IST

கோவில்பட்டியில், வைகோவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக பாஜக நிர்வாகிகள் 2 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன் வாகனப் பிரசாரத்தை வைகோ செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.  இந்நிலையில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக வைகோவைக் கண்டித்தும்,  பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கண்டித்தும் பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில் இரு பெண்கள் உள்பட 54 பேர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் கட்சிக் கொடி மற்றும் கருப்புக் கொடியை ஏந்தியபடி வைகோவை எதிர்த்து கோஷமிட்டனர். 
பின்னர், அண்ணா பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பயணியர் விடுதி நோக்கி வர முயன்றனர். அப்போது,  டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, கருப்புக் கொடி காட்ட முயன்றதாக 54 பேரையும்  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.