மதிதா இந்துக் கல்லூரியில் தீயணைப்பு, பாதுகாப்புப் பயிற்சி
திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
மதிதா இந்துக் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பரணி பயர்ஸ் நிறுவன அதிகாரி குமார், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளித்தார். துணை முதல்வர் இளங்கோ, பேராசிரியர்கள் சேகர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சங்கரவீரபத்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆ.ரந்தீர்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

