குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த தொடர் சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். மாலையில் பேரருவியில் நீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து, மையப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, ஓரமாக நின்று குளிக்க சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பழைய குற்றாலத்திலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

வரிவிதிப்பு பிரச்னைகளுக்கு இந்தியா - அமெரிக்கா சுமுகத் தீா்வு: அமெரிக்கத் தூதா் வலியுறுத்தல்

ஜாம்பியா அதிபா் மீண்டும் வெற்றி!

உக்ரைன் கிராமத்தில் ரஷியா ஏவுகணை வீச்சு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


