தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மதுக்கடையில் துளையிட்டு மதுபானங்கள் திருட்டு

தூத்துக்குடி அருகே அரசு மதுக்கடையில் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

தூத்துக்குடி அருகே அரசு மதுக்கடையில் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர்- ஓட்டப்பிடாரம் சாலையில் முப்புலிவெட்டி கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. அந்தக் கடையின் கண்காணிப்பாளராக ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த வெஸ்லி டைட்டஸ் பணிபுரிந்து வருகிறார். 
வழக்கம்போல திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது கடையின் பின்புறம் துளையிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெஸ்லி டைட்டஸ் அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையின் பின்புறம் துளையிட்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடைக்குள் இருந்த ரூ. 19 ஆயிரத்து 910 ரொக்கம் மற்றும் 76 மதுபாட்டில்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. 
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.