பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்தது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்தது.
நிகழ் தென்மேற்குப் பருவத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்இருப்பு 110 அடிக்கு மேல் உயர்ந்தது. அடவிநயினார், குண்டாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பின.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் 110 அடிக்கு குறையாமல் உள்ளது. பாசனம், குடிநீர்த் தேவைக்காக இவ்விரு அணைகளில் இருந்து 1400 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மிதமான மழை பெய்தது.
புதன்கிழமை பகலில் சாரல் மழை நீடித்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: பாபநாசம் அணை-7 மி.மீ., பாபநாசம் கீழ் அணை-2 மி.மீ., சேர்வலாறு அணை-2 மி.மீ., மணிமுத்தாறு அணை-1.8 மி.மீ., கருப்பாநதி அணை-4 மி.மீ., குண்டாறு அணை-28 மி.மீ., அடவிநயினார் அணை-15 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டு- 2.8 மி.மீ., சேரன்மகாதேவி-2 மி.மீ.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 838 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 135 கனஅடி, கடனாநதி, குண்டாறுஅணைகளுக்கு தலா 20 கனஅடி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 50 கனஅடி நீர்வரத்து இருந்தது.
மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 55 கனஅடி, தாமிரவருணி ஆற்றில் 300 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 70 கனஅடி, ராமநதி அணையிலிருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையிலிருந்து 10 கனஅடி, குண்டாறு அணையிலிருந்து 17 கனஅடி, அடவிநயினார் அணையிலிருந்து 35 கனஅடி, கொடுமுடியாறு அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடி, சேர்வலாறு அணை 114.83 அடி, மணிமுத்தாறு அணை 71.90 அடி, கடனாநதி அணை 82 அடி, ராமநதி அணை 74 அடி, கருப்பாநதி அணை 66.54 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 123.25 அடி, வடக்குப் பச்சையாறு அணை 9.50 அடி, நம்பியாறு அணை 11.38 அடி, கொடுமுடியாறு அணை 41 அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.