கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

பாளை.யில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள்,  அதிகாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 10:06 am IST

பாளையங்கோட்டையில் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள்,  அதிகாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விஜயா வங்கி, தேனாவங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை இணைக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய 9 சங்கங்கள் இணைந்து வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 
அதன் முன்னோட்டமாக பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி முருகன் தலைமை வகித்தார்.  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி விக்டர் துரைராஜ் முன்னிலை வகித்தார். தேசிய வங்கி ஊழியர் அமைப்பைச் சேர்ந்த கில்பர்ட்,  வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சரவணராஜா, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம்,  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி செந்தில் ஆறுமுகம் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள்,  ஊழியர்கள் பங்கேற்றனர்.  வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சக்திவேலாயுதம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.