பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் பாளை. சட்டப் பேரவை உறுப்பினர் டிபிஎம் மைதீன்கான் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மின் கம்பங்களில் மின் விளக்கு எரியாததால் பாளையங்கோட்டை பகுதியில்தொடர் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் உள்ள 105 மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் எந்த விவரமும் குறிக்கப்படவில்லை. இதனால் அந்த கம்பங்களில் மின் விளக்குகள் பழுதடைந்தால், அதுதொடர்பாக புகார் அளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.