டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூர்  நரசிம்மர் கோயிலில்  பிப். 7இல் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:47 am

DIN

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது
 தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில்  மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும்.  அதன்படி, நிகழ்மாதம் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம்,  மகாலட்சுமி ஹோமம் ஆகியன  நடைபெறும். தொடர்ந்து சிறப்பு  அபிசேகங்கள் நடைபெறும்.  மாலை 5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம், தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன.   ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.