அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கமல்-குமாரசாமி சந்திப்பால் மாற்றம் நிகழாது'

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியதால், எவ்வித மாற்றமும் நிகழாது என்றார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:04 am

DIN

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியதால், எவ்வித மாற்றமும் நிகழாது என்றார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் அந்த ஆணையம் முன்பாக காயமடைந்தவர்கள் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர். கர்நாடகத்தில் ரஜினி நடித்த காலா படத்திற்கு தடை விதிக்கக் கூடாது. ரஜினி, கமல் உள்பட எந்த நடிகர் நடித்த படமாக இருந்தாலும் தடை செய்யக் கூடாது.
காவிரி பிரச்னை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்ததால் எந்த மாற்றமும் நிகழாது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு காவிரியிலிருந்து தண்ணீர் வழங்கவில்லை. நீட் தேர்வில் தமிழகம் கடைசி இடம் பிடித்துள்ளது. இது மாணவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.