தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டத் தலைவர் எம்.முத்து முகம்மது தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தி.க.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் என்.சங்கரன் தொடக்கவுரையாற்றினார். சங்கத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் கே.கங்காதரன் சிறப்புரையாற்றினார்.
விழாவில், "சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்; 31-12-2005 ஆம் தேதிக்கு முன்பு ஓய்வூபெற்ற மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு "கிரேடு- பே' வழங்கியது போல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்ச 80 வயதுக்கு மேலான ஓய்வூதியர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் பலனைப் பெற வழிவகை செய்ய வேண்டும்; ஊதியக்குழுவின் ஓய்வூதிய அறிக்கையின் முரண்பாடுகளை களைய வேண்டும்; குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.