திருநெல்வேலி மாவட்ட அணிக்கு புரோ கபடி வீரர்கள் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) நடைபெறுகிறது.
மாவட்ட கபடி கழகத் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய கபடி கழகத்தின் மூலம் புரோ கபடிக்கான இளையோர் பிரிவு வீரர்கள் தேர்வு முகாம் மாநில கபடி கழகத்தின் சார்பில் மார்ச் 6 ஆம் தேதி கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்கான திருநெல்வேலி மாவட்ட கபடி வீரர்கள் தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இதில், 18 முதல் 22 வயதுக்குள்பட்டோர் பங்கேற்கலாம். வயது சான்றுக்கு ஆதார் அட்டை, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, இதில் ஏதாவது ஒன்று தவறாமல் கொண்டு வர வேண்டும். இது குறித்து மேலும் தகவல்களை 94453 72828, 9442125850 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.