ரேஷன்கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க கோரிக்கை

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என  அதன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Updated on
1 min read

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என  அதன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  சென்னையில் மார்ச் 9 ஆம் தேதி போராட்டம்  நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க  அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க  மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார்.  
நெல்லை பாலசுப்பிரமணியன், கூட்டுறவு பேரங்காடி தொ.மு.ச. நிர்வாகி முகம்மது சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழக கூட்டுறவு ஊழியர் சங்க மாநில இணைச் செயலர் பிரேம் ஆனந்த், மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கச் செயலர் தமிழ்செல்வன், கூட்டுறவு பண்டகசாலை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில், "ரேஷன்கடைகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்; கூட்டுறவு அமைப்பின் ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்; ரேஷன்கடைகளில் எடையாளரை நியமிக்க வேண்டும்; ரேஷன் பொருள்களை பாக்கெட் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டுறவு பேரங்காடி தொமுச நிர்வாகி ஐயப்பன் வரவேற்றார்.  நிர்வாகி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com