தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

"ஜிஎஸ்டி மாதாந்திர, காலாண்டு விண்ணப்பங்களை முறையாக தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்'

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை (நமூனா) முறையாக தாக்கல் செய்ய

News image
Updated On :1 மார்ச் 2018, 1:59 am

DIN

சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை (நமூனா) முறையாக தாக்கல் செய்ய வேண்டுமெனவும், தாமதித்துக்கொண்டே சென்றால் அபராதம் அதிகரிக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி கோட்ட மாநில வரிகள் இணை ஆணையர் பா.சுசீல்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 1-7-2017 முதல் ஜிஎஸ்டி வரி சட்டம் அமலில் உள்ளது. இச் சட்டப்பிரிவு 39 மற்றும் விதி 61 (15) இன் படி உள்ளீட்டு வரி வரவு சலுகைகள் பெற்று வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் ஜிஎஸ்டிஆர் 3பி எனும் மாதாந்திர விண்ணப்பத்தை ஒவ்வொரு வரிக் காலத்திற்கும் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் உரிய வரித்தொகையுடன் w​w​w.​g​s​t.​g​o​v.​i​n என்ற இணையதளத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உரிய நாளில் தாக்கல் செய்யாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தாமதக் கட்டணத்துடனேயே தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அந்த விண்ணப்பங்கள் வரி செலுத்துநர்களின் வசதிக்காக இப்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அனைத்து வரி செலுத்துநர்களும் ஒவ்வொரு காலாண்டு முடிந்த பிறகும் வரும் 20 ஆம் தேதிக்குள் உரிய வரித்தொகையுடன் காலாண்டு விண்ணப்பம் (ஜிஎஸ்டிஆர்4) வலைத்தளத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டி பதிவு எண் பெற்றவர்கள் அனைவரும் உரிய விண்ணப்பங்களை வலைத்தளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்3 விண்ணப்பத்திற்கான கடைசிநாள் கடந்த 20 ஆம் தேதியும், 2017 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான ஜிஎஸ்டிஆர்4 விண்ணப்பத்திற்கான கடைசிநாள் கடந்த ஜனவரி 18 ஆம் தேதியும் முடிந்துள்ளன. அதன்பின்பு நாள் ஒன்றுக்கு தாமதக் கட்டணமாக ரூ.20, ரூ.50-ம், அதிகபட்ச தாமதக் கட்டணமாக ரூ.5,000 வரையும் செலுத்தும் சூழல் உள்ளது. 
ஆகவே, வரி செலுத்துநர்கள் உடனடியாக தங்களது விண்ணப்பங்களைச் செலுத்தலாம். சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் வரி விதிப்பு சரகங்கள், துணை ஆணையர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில வரி இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள கணினி மையத்திலும் விவரங்களைக் கேட்டறியலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2574348 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.