மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு

பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மகளிர் கல்லுரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:53 am

பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மகளிர் கல்லுரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
ஆராய்ச்சியில் தரமும் மேம்பாடும் எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரிச்  செயலர் சாம்சன் பால்ராஜ் தலைமை வகித்தார். முதல்வர் உஷாகாட்வின் முன்னிலை வகித்தார்.
இக்கருத்தரங்கில், ஆராய்ச்சி மீள் தேடல் எனும் தலைப்பில் கேரள பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.எம். ரபீ, ஆய்வு நெறிமுறைகள் எனும் தலைப்பில் வேலூர் சி. அப்துல்ஹக்கீம் கலைக் கல்லூரிப் பேராசிரியர் ஆர். அஜாஸ்காஜாமொகைதீன், ஆய்வில் நூலகத்தின் பயன்பாடு எனும் தலைப்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியை திருமகள் ஆகியோர் பேசினர். துணை முதல்வர் ஜெபமலர்வின்செஸ், பேராசிரியர்கள் ஆட்லின், சகினா, ஜெய்ரூபி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரபா வரவேற்றார். பேராசிரியை ஆனி கியூட்டி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.