மேலப்பாளையத்தில் உள்ள கன்னிமார்குளத்தை அண்ணா பல்கலைக்கழக (திருநெல்வேலி மண்டலம்) நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் (திருநெல்வேலி மண்டலம்) சார்பில் சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேலப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னிமார்குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தப் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை பார்வையிட்டு, குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்களை பாராட்டினார். பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், குளத்தின் கரைகளை மேம்படுத்தும் பணியில் மாணவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அண்ணா பல்கலைக்கழக டீன் (திருநெல்வேலி மண்டலம்) ஜி.சக்திநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, மாநகர நல அலுவலர் பொற்செல்வன், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி கோல்டன் ஜூலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்
சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

