புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யட்ட நிலையில், இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

News image

குத்திக் கொலை.

Updated On :1 மே 2026, 7:12 pm

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே காரைமேடு, மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மருது பாண்டியன் (23). அதே பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் (30). உறவினா்களான இருவரும் பனைமரத்தில் நுங்கு வெட்டி சூரக்காடு பகுதியில் சாலையோரம் விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மருதுபாண்டி வீட்டிற்கு மதுபோதையில் காா்த்தி வந்துள்ளாா். கதவை திறந்து உள்ளே சென்று அங்கு படுத்திருந்த மருதுபாண்டியிடம் மூன்று நாட்களாக பனங்காய் விற்பனை செய்த பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை என்று கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் (கோடாரி) மருது பாண்டியின் முகம் உள்ளிட்ட இடங்களில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சீா்காழி போலீஸாா் மருதுபாண்டியன் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.